Influence

அய்யா வைகுண்டர் துவக்கி வைத்த சமூக மத சீர்திருத்தங்கள் பலருடைய எண்ணத்தையும் மறு பரிசோதனை செய்ய வைத்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மன எழச்சி பெறத் துவங்கினர். அவர்களுடைய எண்ணங்களில் மாற்றமும், மறுமலர்ச்சியும் எற்பட்டன. அய்யா வழியின் இயக்கத்தினால் ஏற்பட்ட மறு மலர்ச்சியினால் நாராயண குரு போன்றவர்கள் அனைவரையும் அனுமதிக்கும்படியான ஆலயப் பிரவேசம் போன்ற போராட்டங்களைத் துவக்கினர்.

சுய மரியாதை

அய்யா வைகுண்டருடைய போதனைகள் மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தின. அவர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்குப் போராடத் துவங்கினர். அந்த காலத்தில் நம்பூத்திரி மற்றும் நாயர் போன்ற உயர் ஜாதிப் பெண்கள் மட்டுமே துணிகளால் தங்களுடைய மார்பகங்களை மறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கீழ் ஜாதி பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக் கூடாதென்றும், தங்களுடைய மார்பகங்களை துணியினால் மறைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படாத காலம் அது. அப்படி அவர்கள் தங்களுடைய மார்பகங்களை அவர்கள் மறைத்துக் கொண்டால். அது மாபெரும் குற்றம். அப்படி மார்பகங்களை மறைத்துக் கொண்ட பெண்களுடைய மார்பகங்களை ஆளுனர் அறுத்து எரிந்த சம்பவங்களும் உண்டு. பெண்களுடைய இடுப்பில் தண்ணீர் குடங்களை வைத்தபடி செல்லக் கூடாது, தலையில்தான் தூக்கி வைத்தபடி செல்ல வேண்டும். அய்யாவின் போதனைகளினாலும், கிருஸ்துவ பாதிரிகளின் செல்வாக்கினாலும் கவரப்பட்ட நாடார் இனத்தவர் அத்தகைய செயல்களை எதிர்த்துப் போராடத் துவங்கினர். அவர்கள் தங்களுடைய தலையில் தங்கள் இஷ்டப்படி தலைபாகை அணிந்து கொள்ளத் துவங்கி, பெண்களின் மார்பகங்களை சேலையினால் மறைத்துக் கொள்ளும்படி கூறலாயினர். பெண்கள் குப்பாயம் என்று அழைக்கப்பட்ட இரவிக்கையை அணியத் துவங்கினர். பக்கத்து நாடான பாண்டிய நாட்டில் இருந்த வழக்கப்படி பெண்கள் சேலைகள் உடுத்தத் துவங்கினர்.

அவற்றைக் கண்ட உயர் ஜாதியினர் நாடார் இன பெண்கள் மீது முரட்டுத்தனமான தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தனர். பல ஆளுனர்கள் சீர்திருத்தத்தைத் துவங்கிய பெண்களுக்கு அபராதங்கள் விதிக்கத் துவங்கினர். கன்யாகுமரி மாவட்டத்தில் இருந்த கல்குளம் என்ற இடத்தில் அப்படிப்பட்ட கொடுமைகள் அளவுக்கு மீறிப் போனதினால் கிருஸ்துவ அமைப்பினர் அரசிடம் புகார் மனு தாக்கல் செய்தனர். அகஸ்த்தீஸ்வரம் தாலுக்காவில் முஸ்லிம்களும், சூத்திரன் எனப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து நாடார் இன பெண்களுடைய இரவிக்கைகளை கிழித்தெறிந்தனர், அவர்களுடைய வீடுகள் தீக்கிரயாகப்பட்டன. நாடார்களும் அரசிடம் அது குறித்து புகார் மனு செய்தனர். அவற்றை விஜாரிக்க சுசீந்திரத்திற்கு வந்த திவான்களோ நாடார்களிடம் அமைதியாக இருக்குமாறும், அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பழைய பழுக்க முறைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது எனவும் அறிவுறைக் கூறினர்.

ஆலயப் பிரவேசம்

உயர் ஜாதி இந்துக்களின் கொடுமைகளைக் கண்டு கொதித்துப் போன பலர் கிருஸ்துவ மதத்திற்கு மாறினர். அதனால் பாதிரியார்களின் அடைக்கலம் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் மூலம் மதம் மாறியவர்கள் மரியாதை பெற்றனர். அய்யா வழியைப் பின் பற்றிய பெருவாரியான இந்தக்களும் தங்களடைய பழைய கட்டுப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் துவங்கினர். அமைதியான முறையில் மாற்றம் ஏற்படத் துவங்கிற்று.

திருவான்கூர் சமஸ்தானம் மற்றும் அன்றைய மதராஸ் பகுதிகளிலும் (சென்னை) தாழ்த்தப்பட்ட குடி மக்களுக்கு ஆலயங்களுக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. அது மட்டும் அல்ல அவர்களுக்கு தேர் வீதிகளில் நடக்கக் கூட அனுமதி இல்லை. இத்தனைக்கும் அவர்கள்தான் ஆலயங்களைக் கட்டும் பணிகளில் கடுமையான வேலைகளை செய்தனர். அய்யா வைகுண்டர் ஆலயங்களை வெறுத்தாலும் சமூக நீதியை நிலைநாட்ட பாடுபட்டார். அவருடைய கொள்கைகளில் கவரப்பட்ட தாழ்த்தப்பட்ட குடி மக்களும் நாடார்களும் ஆலயங்களுக்குள் நுழையத் துவங்க அங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தன. ஆகவே ஆலயங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமது பக்தர்களுக்கு ஆணையிட்ட அய்யா அதற்குப் பதிலாக அங்காங்கே நிழல் தாங்கள்களை அமைத்து வணங்குமாறு போதனை செய்தார். ஆகவே அவர்களில் சிலர் காளி மற்றும் கிருஷ்ணர் ஆலயங்களையும் நிறுவி காளி கோவில்களை அம்மன் ஆலயம் என அழைக்கத் துவங்கினர்.

சைவ உணவும் சுயக் கட்டுப்பாடும்

அய்யா வைகுண்டர் சுத்த சைவர். மாமிசம் உண்டதில்லை. ஆகவே தம்மைப் பின்பற்றுபவர்களும் சைவ உணவை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அந்த காலத்தில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலோனோர் அசைவ உணவு அருந்தியவர்கள். ஓரு வேளையேனும் மீன் இல்லாத சமையல் இல்லை. புகையிலைப் போடுவது மிக அதிகம். ஆனால் அய்யாவின் போதனைகளினால் கவரப்பட்ட அவர்களிடம் இருந்த அந்த பழக்கங்கள் மெல்ல மாறத் துவங்கின. அவருக்குத் தெரியும் மாற்றங்கள் ஒரே நாளில் வந்து விடாது என. ஆகவே வாரத்தில் இரண்டு நாளாவது – வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் – சைவ உணவு மட்டும் அருந்துமாறு கட்டளை இட்டார். அதை ஏற்ற அவருடைய பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் அந்த பழக்கத்தைக் கடை பிடித்தனர். பண்டிகை நாட்களிலும் விழாக் காலத்திலும் அங்குள்ள மக்கள் கடுமையான கட்டுப்பாட்டுடன் இருந்து அசைவ உணவு அருந்தாமல் இருந்தனர். அது போல கள் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் தவிற்குமாறு அய்யா கூற அதை அங்குள்ளவர் ஏற்றுக் கொண்டனர். அந்த ஊரில் கள் இறக்கப்படுவது இல்லை.

வீட்டு அமைப்பு

அய்யா வைகுண்டர் தன்னுடைய பக்தர்களை ஒன்று சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தினார். முன்பெல்லாம் கிராமங்களில் ஓலை குடிசையில்தான் மக்கள் இருந்து வந்தனர். நிழல் தாங்கல்கள் துவக்கப்பட்டதும் அதைச் சுற்றி பலரும் தங்கத் துவங்கினர். அவர்களில் பலரும் ஓடு வேய்ந்த வீடுகளை அமைக்க முயன்றனர், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே அவர்கள் அரசின் ஆணையை எதிர்த்து ஓடு வேய்ந்த வீடுகளை அமைக்கத் துவங்கினர். அப்படிப்பட்ட நிலையில் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக பல வீடுகள் அமையத் துவங்க சமுதாய வாழ்க்கை தானாக அமைந்தது. சொந்த வீடுகளில் இருந்த ஆலயங்கள் பொது ஆலயங்களாக மாறத் துவங்கின. கிராமத்தில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து அவற்றை நிர்வாகிக்க குழுக்களை அமைத்தனர். அப்படி ஒரே சமுதாயமாக வாழத் துவங்கியவர்களின் எண்ணம் பெருமளவு விரியத் துவங்கிற்று.அதைதான் குறிப்பிடும் வகையில் அய்யா அவர்கள் ‘ பொறுமை பெரியது, பிரியாதிரு மனமே ‘ என்றார்.

சுரண்டலுக்கு எதிரான போராட்டம்

அந்த காலத்தில் நாடார்களுக்கும் கீழ் ஜாதி மக்களுக்கும் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. அரச மரம் மற்றும் பெண்களின் மார்பகங்களுக்குக் கூட வரிகள் விதிக்கப்பட்டன. பனை மரங்களுக்கும் வரிகள விதிக்கப்பட்;டன. ஆகவே வரி செலுத்த முடியாதவர்கள் திருவான்கூரை விட்டு வெளியேறினர். ஆனால் ஓடிவிட்டவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய சொந்தக்காரர்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. அரசினர் சார்பில் வரி வசூலித்தவர்கள் உயர் ஜாதி இந்தக்கள். ஆகவே அவர்கள் கூறியபடி கீழ் ஜாதி மக்கள் நடக்க வேண்டியதாயிற்று. பனை மரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் கேட்ட பொழுது இனாமாக கொடுக்க வேண்டி இருந்தது. உயர் ஜாதி இந்தக்களின் வீடுகளில் கூலி வாங்காமல் வேலை செய்ய வேண்டியதாயிற்று. அதை பரி எனக் கூறினர். அதை எதிர்த்து அய்யா அவர்கள் ‘ அவரவர் தேடும் முதல் அவரவர் வைத்தாடிடுங்கோ’ எனக் கூறியது பெரும் புயலை எழுப்பியது. பரிக்கு எதிராக கீழ் ஜாதியினர் தொடங்கிய போராட்டம் வெற்றி பெற்றது. வரி கொடுக்கவும் மறுத்தனர். உயர் ஜாதியினரையும் அரசையும் எதிர்த்தப் போராடத் துவங்க அவர்கள் செலுத்த வேண்டிய வரி சேமிப்பாக மாறியது. அதை அவர்கள் தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கு சேமிப்பாக வைக்கத் துவங்கினர்.

கல்வியும் தொழிலும்

அய்யா வைகுண்டர் தம்முடைய பக்தர்களிடம் தொழில் முறைகளை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் விவசாயமும்; தோட்டத் தொழிலும் செய்யத் துவங்கினர். அவர்கள் மேலும் பல்வேறு தொழில்களைத் துவக்கினர். அரிசி, உப்பு, மீன், எண்ணை, மரம், மளிகை சாமான் போன்றவற்றில் தொழில்களை செய்யத் துவங்கினர். பல சிறு தொழில் சாலைகள் அமைத்தனர்.

நிழல் தாங்கல்களை கல்வி போதிக்கும் இடமாகவும் பயன் படுத்தினர். இரவு பாடசாலைகள் துவக்கப்பட்டன. வயதானவர்களையும் கல்வி அறிவு பெற்றுக் கொள்ள நிர்பந்தித்தனர். அகிலத்திரட்டு புனிதப் புத்தகத்தின்படி நடக்கத் துவங்கினர். ஏடு வாசிப்பு பற்றிய விளக்க உரைகள் தரப்பட்டன. தேனியைச் சேர்ந்த கே.பி.பி.ஈ. பண்டார நாடார் குடும்பம் அய்யா வைகுண்டர் பெயரில் ஒரு ஆங்கிலப் பள்ளி நிலையம் நிறுவி உள்ளார். அது மிகச் சிறந்தப் பள்ளியாக விளங்குகின்றது.

ஆலய நிர்வாகம்

ஆலயத்திற்குள் நுழைவதற்குத் தடை செய்யப்பட்ட கீழ் ஜாதி மக்கள் தாங்களாகவே சில ஆலயங்களை நிறுவி நிர்வாகித்தனர். ஆலயப் பிரவேசம் அனுமதிக்கப் பின்னரும் அவர்களில் பலரும் தங்கள் ஆலயத்தைத் தவிற பிற ஆலயங்களுக்குச் செல்லவில்லை. காரணம் அய்யா வைகுண்டருடைய போதனைகள். நிழல் தாங்கல்கள் மேலும் மற்ற குடும்ப ஆலயங்களின் மேம் பாட்டிலும் கவனம் செலுத்தினர். சாமித்தோப்பில் ஆலயத்திற்கு வேண்டிய வாகனங்களைத் தயாரித்தனர். பாதினோறு நாள் ஆலயத் திருவிழாக்களில் ஒன்றிணைந்து வேலை செய்து ஒரே குடும்பம் போல இருந்தனர். தங்களுடைய வீட்டுத் திருமணங்களில் தங்களுடைய குருமார்களையே அழைத்து அவர்கள் தலைமையில் திருமணம் செய்தனர். நிழல் தாங்கல் நிர்வாகக் கமிட்டிகளை ஜனநாயக முறையில் தேர்ந்து எடுத்தனர். மாதாந்திரக் கூட்டங்களை நடத்தினர். அனைரும் கலந்து ஆலோசித்தப் பின்னரே முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிழல் தாங்கல்களும் ஜாதிகளும்

இன்றைக்கும் கூட பலர் அய்யா வழி என்பதை நாடார்களுடைய இன இயக்கமாகவே கருதுகின்றனர். ஆனால் அய்யா வைகுண்டர் தன்னுடைய நோக்கம் ஒரு ஜாதி அல்ல தாழ்ந்த குலத்தில் உள்ள பதினெட்டு ஜாதியினரையும் உயர் ஜாதி இந்தக்களுடையப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே என்று அகிலத்திரட்டில் கூறி உள்ளார். திருவான்கூர் சமஸ்தான ஒப்பந்த பனை ஓலையில் அதனால்தான் அவர் கையெழுத்து இட மறுத்தார். அப்படி கையெழுத்துப் போட்டு விட்டால் பிற ஜாதி மக்களிடம் பிரசாரம் செய்திருக்க முடியாது. வைகுண்டரின் நோக்கமே ஜாதியற்ற சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதே. அப்படி என்றால் நாடார் இன மக்களுக்காக ஏன் அதிக அக்கரை எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழம்பலாம். அய்யா அதிக அக்கரை எடுத்துக் கொண்டதற்குக் காரணம் கீழ் ஜாதியினரில் நாடார்கள் மட்டுமே பெருமளவு தொல்லைப் படுத்தப்பட்டிருந்தனர் என்பதினால்தான். மேலும் அய்யா வாழ்ந்து கொண்டிருந்த அகஸ்தீஸ்வரபுரத்தில் அந்த ஜாதி மக்களே அதிகம் இருந்தனர்.

அய்யா வைகுண்டரின் நிழல் தாங்கல்களை பல ஜாதியினரும் நிறுவி நிர்வாகித்து வருகின்றனர். உதாரணமாக நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தில் செட்டிக் குளத்தில் உள்ள நிழல் தாங்கல் தொண்டமான் ஜாதியினரால் நிர்வாகிக்கப்படுகின்றது. வெள்ளாளர், நாயர், கோனார், பணிகர், மரவர், வண்ணார், நநீத், செட்டியார் போன்ற ஜாதியினரும் பல நிழல் தாங்கல்களை நிறுவி நிர்வாகித்து வருகின்றனர். அவற்றில் அம்பலவாணபுரம், நாரி குளம், செங்கனூர் , வெண்சாரமூடு போன்ற இடங்களில் உள்ள நிழல் தாங்கல்களே சாட்சியாகும். சென்னையிலும் சமீபத்தில் ஐந்து நிழல் தாங்கல்கள்; அமைக்கப்பட்டு உள்ளன. பம்பாயில் ஒரு நிழல் தாங்கல்கல் அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீலங்காவிலும் கூட ஒரு பக்தர் ஒரு நிழல் தாங்கல் அமைத்து உள்ளார். பால பிரஜாபதி அவர்களிடம் அனைத்து நிழல் தாங்கல் பட்டியலும் உள்ளன. இதுவரை 3500 நிழல் தாங்கல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதற்குக் காரணம் அய்யா வைகுண்டரிடம் பக்தர்களுக்கு உள்ள ஈடுபாடுதான்.

மற்ற சீர்திருத்தவாதிகள்

அய்யா வைகுண்டரின் இயக்கத்தால் கவரப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் அய்யன் காழி போன்றவர்களும் அவரவர்கள் பாணியில் அப்படிப்பட்ட இயக்கங்களைத் துவக்கி உள்ளனர். ஏன் ஸ்வாமி விவேகானந்தர் கூட கன்யாகுமரிக்கு பயணம் செய்த பொழுது அய்யா பற்றிக் கேள்விப் பட்டு சாமித்தோப்பிற்கு வருகைத் தந்தார். அது முதல்தான்; அவர் தலைப்பாகை அணியத் துவங்கினார் எனக் கூறப்பட்டது.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami