Missionary

அய்யா வைகுண்டரும் மற்றவர்களும்

அய்யா வைகுண்டருடைய புகழ் பெரும்பாலும் கீழ் ஜாதியினரிடம் மட்டுமே பரவி வந்தது. அதன் காரணம் அன்றைய எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேல் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதினால் அவருடைய இயக்கத்தைப் பற்றி எந்த குறிப்புக்களையும் வேண்டும் என்றே; எழுதி வைக்கவில்லை. மேலும் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டில் இருந்த திருவான்கூர் சமஸ்தான ஏடுகளிலும் அவரைப் பற்றி எந்தக் குறிப்புக்களையும் பதிவு செய்யவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை என்ற கவிஞர் , நாஞ்சில் நாட்டில் அப்பொழுது வெள்ளாளர்கள் கடை பிடித்து வந்த கலாசார சமுதாய வாழ்க்கையை நையாண்டி செய்து எழுதி இருந்த புத்கமான மறுமக்கள் வழி மான்மியம் என்பதில் அய்யா வழி பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். அவர் அய்யா வழி இயக்கத்தினர் கடைப்பிடித்து வந்த பால்வைப்பு மற்றும் கணக்குக் கேட்டல் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அய்யா வழியினர் மேற்கொண்டிருந்த வழிமுறைகளை சுட்டிக் காட்டி உள்ளார். அவர் எழுதியதற்குச் சான்று போல சாமித்தோப்பில் பால்வைப்பு மற்றும் கணக்குக் கேட்டல் போன்ற இரண்டும் இன்றளவும் அய்யா வழியினரால் கடை பிடிக்கப்படுகின்றது.

கவிமணி இருந்த தேவூர் எனப்பட்ட இடம் சாமித்தோப்பிற்கு அருகில்தான் உள்ளது. கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் அய்யா வழி இயக்கத்தை நம்பினார் என்பது மட்டும் அல்ல அதனை பெரிதும் மதித்தார். மேல் ஜாதியினரில் அவர் மட்டுமே அய்யா வைகுண்டரை ஏற்றுக்கொண்டு அவரைப் பற்றிய குறிப்பை எழுதி வைத்துள்ளார்.

ஆங்கில மதப் போதகர்கள்

இந்தியாவுக்கு மதப்பிரசாரம் செய்ய வந்த ஆங்கிலேய மதப் போதகர்கள் அய்யா வழி தங்களுடைய பிரசாரத்திற்கு முட்டுக் கட்டையாக உள்ளது என நம்பினர். அவர்கள் அய்யா வழி குறித்து மேலிடத்திற்கு தவறான செய்திகளை நிறைய தந்தனர். 1863 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் நகர மதபோதகர் பிரிவு சமர்பித்த ஆண்டு அறிக்கையில் அய்யா வழி பக்தர்கள் தேவாலயங்களை விட மிகச் சிறிய கட்டிடங்களில் ஒன்று கூடுகின்றனர் எனவும், காட்டுத் தீப்போல பரவி வரும் அய்யா வழியினரால் தங்களுடைய உறக்கமே கெட்டு விட்டது எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

அது போல சாந்தாபுரம் மதப் பிரசாரக் குழுவினருடைய ஆண்டு அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டு உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு முத்துக்குட்டி என்ற பனைமரமேறி ஒருவர் தன்னை விஷ்ணு என்ற ஆண்டவனின் அவதாரம் எனக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார். அவருடைய பக்தர்கள் பல இடங்களில் சிறு ஆலயங்களை எழுப்பி வருகின்றனர். முத்துக்குட்டியை விஷ்ணுவின் அவதாரம் என்று அவர்கள் நம்புவதினால்; அவரை பெரிதும் போற்றி வணங்குகின்றனர். நம்முடைய மதப் பிரசாரத்திற்கு அந்த போலி மனிதர் தடையாக இருக்கின்றார் .

1894 ஆம் ஆண்டு சமர்பித்த தமது ஆண்டு அறிக்கையில், கொட்டாரா மாவட்டத்தில் இருந்த நாகார்;கோவில் லண்டன் மத போதகக் கிளை, தாமரைக்குளம் மற்றும் சாமித்தோப்பில் அப்பொழுது நிலவி இருந்த நிலையை தெளிவாக குறிப்பிட்டு இருந்தது. முத்துக்குட்டி இயக்கத்தினர் கிருஸ்துவ மதத்திற்கு சவாலாக உள்ளனர் எனவும், ஒவ்ஒரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் அந்த இயக்கத்தில் வந்து சேருவதாகவும் சாமித்தோப்பில் நடைபெற்ற தேர்த் திருவிழா பற்றியும் எழுதி இருந்தனர்.

அன்றைய அரசாங்கம், ஆட்சியில் இருந்தவர்கள் போன்றவர்களுடைய முழுமையான ஆதரவு ,மற்றும் அவர்களுக்குக் கிடைத்து வந்த பெரிய அளவிலான மானியத் தொகைகள் என அனைத்தும் இருந்தும் கிருஸ்துவ மதப் போதகர்களினால் அய்யா வழி இயக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடந்த 150 வருடத்தில் மற்ற எந்த ஒரு மதமும் மிகக் குறுகிய காலத்தில் காட்டுத் தீப்போல பரவிய அய்யா வழிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami