சாமித் தோப்பின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது புனித முத்துக் கிணறு. அதுவே அந்த ஆலயத்தின் புகழ் பெற்ற தீர்தம். முத்துக் கிணறு என்ற அந்த கிணரு அய்யா அவர்காளால் அருள் பாலிக்கப்பட்ட கிணறு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யாவிற்கு முன்பும், அவர் வாழ்ந்த காலத்திலும் அந்த இடம் ஜாதி வெறியர்களாலும், ஏகாதிபத்திய ஆட்சியினராலும் ஆளப்பட்டு வந்தது. தீண்டாமை என்ற பழக்கம் நடை முறையில் இருந்தது. ஒவ்ஒரு ஜாதியினரும் பயன்படுத்தவென்று தனித்தனியான கிணறுகள் மற்றும் குளங்கள் இருந்தன. அவைகளை மற்ற ஜாதியினர்; உபயோகிக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த கொடிய பழக்கத்தை அழிக்க நினைத்த வைகுண்டர், சாமித் தோப்பில் ஒரு கிணறு தோண்டினார். ஜாதி பேதமின்றி எவர் வேண்டுமானாலும் வந்து உபயோகிக்கும் வகையில் நாட்டில் அமைக்கப்பட்ட முதல் நீர் கிணறு அதுவே. பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த மக்கள் அதில் இருந்த தண்ணீரை பருகவும் குளிக்கவும் பயன் படுத்தலாயினர். அதைக் கண்டு பொறாமைக் கொண்ட ஜாதி வெறியர்கள் அந்த கிணற்றில் கொடுமையான விஷத்தைக் கலந்து விட்டனர்.
ஆனால் வைகுண்டர் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதை அந்தக் கிணற்றில் போட்டு, அந்த சிவலிங்கத்தில் விஷத்தை இறக்கி விட்டார். கிணற்றில் விஷத்தைக் கலந்து விட்ட செய்தியை வைகுண்டரிடம் கூறி தங்களை அதில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்ட மக்களிடம் அந்த தண்ணீரில் இருந்த விஷத்தை தான் எடுத்துவிட்டதாகக் கூற அதை நம்பி அதில் இருந்து தண்ணீர் குடித்த மக்களுக்கும், குளித்தவர்களுக்கும் எந்தவிதமான கெடுதலும் நேரவில்லை. ஆனால் அதை நம்பாமல் அந்த நீரை பருகியவர்களும், அதில் குளித்தவர்களும் மயக்கம் அடைந்தனர். அந்த செய்தியையும் வைகுண்டரிடம் சென்று கூறிய மக்கள், அவர்களை காப்பாற்றுமாறு வேண்ட, அவரும் அந்தப் புனித நீரை மீண்டும் எடுத்துப் போய் அவர்கள் மீது தெளிக்கும்படிக் கூறினார். என்ன அதிசயம், அந்த நீரை மீண்டும் அவர்கள் மீது தெளிக்க மயக்கம் அடைந்து கிடந்த அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தனர். நூற்றுக்கணக்கில் பலரும் வந்து குளிக்கும், குடிக்கும் அந்த கிணற்று நீர் தர்மயுகத்தனால்; பதப்படுத்தப்பட்ட (சுத்தமாக்கப்பட்ட) நீராக மாறிவிடுவதினால் அனைவரையும் பாதுகாக்கும் எனநம்பப்படுகின்றது. பல நாள்பட்ட நோயாளிகளும், பைத்தியங்களும் அந்த ஆலயத்திற்கு வந்து தங்கி அந்த கிணற்றில் நீராடினால் அவர்களுடைய நோய் மறைந்து விடுகின்றதாம்.
குருமார்கள் தினமும் அதிகாலையில் அந்த குளத்தில் குளித்தப் பின்னர்தான் தங்களுடைய கடமையை செய்யத் துவங்குகின்றனர். விழாக் காலத்தில் எட்டாவது நாள் அன்று குதிரை வாகனத்தில் வைகுண்டர் பவனியாக எடுத்துச் செல்லப்படுகின்றார். அன்றுதான் கலியுடன் வைகுண்டர் சண்டையிடுவதாக ஐதீகம் உள்ளது. வேலும் அம்பும் ஏந்தி சண்டையிடும் அந்த காட்சியை காண வரும் ஆயிரக்கணக்கான மக்கள் பதம் எனப் பெயர் கொண்ட அந்த கிணற்று நீரை எடுத்துப் பருகுகின்றனர். அதன் பிறகு பதம் விடுதல் என்ற பெயரில் அந்தக் முத்துக்கிணற்று நீரில் குளிக்கின்றனர்;. தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த கிணற்றில் குளிக்க ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.
1994 ஆம் ஆண்டு பதினேழாம் தேதி, செப்டம்பர் மாதம் புரட்டாசியன்று ஐந்து கிலோ எடையிலான புளுரேட் என்ற கொடுமையான விஷத்தை சிலர் அந்தக் கிணற்றில் கொண்டு போய் போட்டுவிட்டனர். அதன் விளைவாக கடுமையான விஷவாயு நாற்றம் அந்தக் கிணற்றில் இருந்து வெளிவர அந்த கிணற்றில் குளிக்க வேண்டாம் என அங்கு வந்த மக்களை பலரும் தடுத்தும் ஆயிரக்கணக்கானவர்கள், ஏன் ஆறு மாதக் குழந்தையைக் கூட சிலர் அதில் குளிப்பாட்ட, ஆச்சரியம் படும் வகையில் அதில் குளித்த எவருக்கும் எந்தவிதமான கெடுதலும் நேரவில்லை என்பதைக் கண்டனர். அதன் பின் அந்த விஷம் கலந்த கலவையின் காகிதப் பொட்டலத்தை எடுத்து வெளியே வீசினர். அய்யா வைகுண்டரே தன்னுடைய பக்தர்களை அந்த விஷத்தில் இருந்து காத்து இருக்கின்றார். அந்த நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்தவர்கள் ‘அய்யா சிவ சிவா அரகரா அரகரா’ என கோஷமிட்டனராம். அனைவரையும் அந்த இடத்தில் தர்மம் செய்ய வேண்டும் என புனித புத்தகமான அருள்நூலில் அறிவுறை தரப்பட்டு உள்ளது. அந்த கிணற்றுக்கு அருகில் அன்னதான சாலை உள்ளது.