Pancha Pathis

அய்யா அவர்கள் ஐந்து பதிகளை நிறுவினார். பதி என்றால் விருந்தினர்கள் வந்து தங்கும் இடம். அதை தவிற பல நிழல் தாங்கல் என்ற தங்கும் இடங்களையும் நிறுவினார். அவற்றில் முக்கியமான பதி அய்யா வழியின் தலைமை இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது. மற்ற பதிகள் வருமாறு:-

1) முத்துப்பதி
2) தாமரைக்குளம் பதி
3) அம்பலப்பதி
4) பூப்பதி

முத்துப்பதி

அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் முதலில் நடத்திய துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த இடத்தில் எழுநுர்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தபடியும் சைவ சமையல் அருந்தியபடியும் எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்யாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார்.

முத்துப்பதி அந்த இடத்தில்தான் அமைக்கப்பட்டு சாமித்தோப்பு குருகுலத்தின் நேரடிப் பார்வையில் உள்ளது. அதன் பின் சில காரணங்களினால் அரசு அந்த இடத்தை ஏலத்தில் விட வேண்டியதாயிற்று. அதை ஏலத்தில் எடுத்தவர்கள் அங்கு பணிவிடையை செய்தனர். இப்போதும் அவர்களுடைய சந்ததியினர் தொடர்ந்து பணிவிடை செய்கின்றனர். முத்துப்பதி தனி ஆலயமாக அமைக்கப்பட்டு விட்டதினால் டிரஸ்ட் ஒன்றின் கீழ் இந்த ஆலயம் இயங்குகின்றது.

கைது ஆகும் முன் அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக் கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் எனக் கூறப்பட்டது. அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் எண்ணுவதால் ஒவ்ஒரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித்தோப்பில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர். சாமித்தோப்பு குருகுலத்தில் இருந்து குருமார்களும் அங்கு வந்து பணிவிடை செய்து அன்னதானமும் செய்கின்றனர். கன்யாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முத்துப்பதி. கன்யாகுமரியில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும்.

தாமரைக்குளம்பதி

அய்யா வைகுண்டருடைய ஒரு பக்தரான அரிகோபாலன் என்பவருடைய பிறந்த ஊர் தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற புனித நூலை இயற்ற அய்யா வைகுண்டருக்கு உதவியவர். அதனால் அவர் அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர். ஓரு முறை அய்யாவை அந்த இடத்திற்கு வருமாறு பக்தர்கள் அழைத்தனர். அவரும் அவர்களுடைய அழைப்பை ஏற்று அங்கு சென்று ஒரு நாள் தங்கி விட்டு சாமித்தோப்பிற்குத் திரும்பினார். அங்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அது முதல் ஒவ்ஒரு வருடமும் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அய்யாவை வாகனத்தில் ஏற்றி அவர்கள் அந்த இடத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. தினப் பணிவிடைகள் அங்கு நடைபெறுகின்றன. அங்கு பண்டிகைகளில் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன். அந்த பதியை உள்ளுர் கிராம மக்கள் குழு ஒன்று கவனித்துக் கொள்கின்றது. சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப் பதி அமைந்து உள்ளது. கன்யாகுமரி மற்றும் நாகர் கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி.

அம்பலப்பதி

அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அம்பலப்பதி என்ற அந்த இடத்தில்தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்த பொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள்; எடுத்துக் கொண்டார். முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார். அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன்குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார். அவர் நிறுவிய அம்பலம் கவனிக்கப்படாமல் அழிந்து போக அதன் பின் வேறு சிலர் அந்த இடத்தில் ஆலயம் அமைத்து பணிவிடை செய்யத் துவங்கினர். அவர்களுடைய சந்ததியினர் இன்றும் அந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளனர். ஒவ்ஒரு வருடமும் அங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அய்யாவை ஆலயத்தைச் சுற்றி பவனியாக் எடுத்துச் செல்ல பல வாகனங்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை பல்லத்துப்பதி என்றும், மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.

பூப்பதி

அய்யா வைகுண்டர் தன்னுடைய கடைசி ஆறு வருடங்களை சாமித் தோப்பில்தான் கழித்தார். அவர் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். அவருக்கு நிலங்களும் தோட்டங்களும் இருந்தன. அவர் மாடுகளையும் வைத்திருந்தார். ஈதமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக் கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள்.

அதன் பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத் தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது. அந்த பதியையும் உள்ளுர் கிராம மக்கள் குழு ஒன்று நிர்வாகிக்கின்றது. ஒவ்ஒரு வருடமும் அங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பூபு;பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது . அந்த இடத்திற்கு பஸ் மூலம் செல்ல முடியும்.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami