Prophet

பின்னர் நடக்க இருப்பதை முன்பே கூறிய அய்யா வைகுண்டர்

பிற் காலத்தில்; நடக்க இருந்த பல நிகழ்ச்சிகள் பற்றி அய்யா வைகுண்டர் புனித நூல்களான அருள்நூல் மற்றும் அகிலத்திரட்டில் எழுதி உள்ள செய்திகள் பல உண்டு. அருள்நூல் மற்றும் அகிலத்திரட்டில் எழுதி உள்ள செய்திகளை எவராவது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு அதில் இருந்து கிடைக்கும் வருங்கால நிகழ்வுகள் பற்றிய செய்திகளை எழுத பக்கம் போதாது. உண்மையான ஆனால் நம்ப முடியாத செய்திகள் அவை. அவற்றில் சில இது.

இராம ஜென்ம பூமி- பாபரி மசூதி

அயோத்திப் பட்டினம்தான் அழியுதே என் மகனே —  அருள்நூல்
மகனே அயோத்திப் பட்டிணம் அழியப் போகின்றது

பல நூற்றாண்ண்டுகளுக்கு முன்பு இராமர் பிறந்த இடத்தில் இருந்த ஆலயத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதை அழிக்க பலரும் முயன்றனர். பலரும் இராமர் பிறந்த அயோத்தி நகரம் வேறு இடத்தில் இருப்பதாக நம்புகின்றனர் என்றாலும் பெருவாரியான மக்கள் இராமர் பிறந்தது இந்த இடத்தில்தான் என்றே நம்புகின்றனர். நாற்பது ஆண்டுகள் முன் எழுந்த சர்ச்சையினால் அந்த இடத்தில் இருந்த ஆலயம் மூடப்பட்டது. பின்னர் அது இந்துக்களின் பூஜைக்கென திறந்து விடப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் அந்த கட்டிடத்தின் மீது  கொடி ஏற்ற முயன்றனர். இறுதியாக அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு இராமஜென்ம பூமி அமைக்கப்பட்டது. ஆனால் நடந்துள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி ‘என்ன நடக்க உள்ளது, அதன் முடிவு என்ன’ என்பதை மகனே அயோத்திப் பட்டிணம் அழியப் போகின்றது என்று அய்யா வைகுண்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி உள்ளார்.

சாலைகளும் வாகனங்களும்

நாழுக்குநாழிகை நடக்கும் வழி குறுகும் – அகிலத் திரட்டு

அய்யா வைகுண்டர் வாழ்ந்திருந்த காலத்தில் சாலை வசதிகளும் போக்குவரத்து வாகனங்களும் அதிகம் இல்லை. பணம் படைத்தவர்கள் குதிரை மீதும், மற்ற விலங்குகள் இழுக்கும்  வண்டிகளிலும் சவாரி செய்தனர்.  சாதாரணக் குடி மகன் பல்வேறு இடங்களுக்கும் நடந்தே செல்ல              வேண்டி இருந்தது.  நல்ல சாலைகளும் கிடையாது. மன்னர்களால் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டு இருந்ததாக நாம் படித்து இருந்தாலும் அந்த சாலைகளில் அனைவரும் நடக்கக் கூடது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இன்றைக்குள்ள சாலைகள் முற்றிலும் மாறுபட்டவை. எங்கு செல்ல வேண்டும் எனிலும் இருசக்கர வண்டிகளிலும், கார் மற்றும் அரசு வாகனங்களில் பயணம் செய்ய முடியும். ஆக வைகுண்டர் அன்றே கூறியது நிஜமாகி உள்ளது.

பிரோபிஸ் – பிரோபிஸ் ஜூலிபோரா

வெட்டவெளிதனிலே மக்கள் வேலிபயிராகுதப்பா – அருள் நூல்
மகனே, வெட்டவெளிக்கு தடுப்பு வேலி உருவாகுமப்பா

இந்திய நாட்டின் எந்த வெட்ட வெளிப் பகுதிகளுக்குச் சென்றாலும் பிரோபிஸ் ஜூலிபோரா என்ற புதர் செடி மண்டிக் கிடப்பதைப்; பார்க்கலாம். இதன் மற்ற பெயர்கள்  வெளிக்  கருவை, டெல்லி  முள், காந்தி முள் போன்றவை. இந்த

செடியைப் புதர் போல நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பல   இடங்களிலும் பயிரிட்டனர். அதன் காரணம் அது பயங்கரக் காற்றினால் ஏற்படும் பூமி அரிப்பைத் தடுத்து நிறுத்தும். அது மட்டும் அல்ல பயங்கரமாக வீசும் காற்றின் சக்தியையும் குறைக்கும். அய்யா அவர்கள் கூறியது போல இவை இப்போது மரங்களாக வளர்க்கப் பட்டு அடுப்புக் கரி மற்றும் மரப்பட்டைகளாக பயன் படுத்தப்படுகின்றன. 

பெண்கள் ஆதிக்கம்

நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமித்து
ஒரு குடை கீழ் ஆள்வார்                                 – அகிலத் திரட்டு

உலகின் ஆட்சி பெண்கள் கைகளில் இருக்கும்

அய்யா வைகுண்டர் வாழ்ந்திருந்த காலத்தில் பெண்கள் மிகவும் கொடுமை படுத்தப்பட்டனா.; அவர்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் கிடையாது. வெளியில்; செல்ல முடியாமலும்  கல்வி அறிவு பெற முடியாமலும் இருந்து வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இன்றைய நிலையைப் பாருங்கள். ஆணுக்கு நிகராகப் பெண்கள் உள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறுகின்றனர், ஆகாய விமானம் ஓட்டுகின்றனர், ஏன் சில நாடுகளில் ஆட்சியிலும் இருந்து வந்தனர். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், இந்தியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளை சில வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஆட்சி செய்தனர். அய்யா வைகுண்டர் முன்பே கூறி  இருந்தது போல  உலகெங்கும் பெண்கள் ஆதிக்கம் துவங்கி விட்டது.

அழிக்கப்படும் காடுகள்;
நாடுNhறும் புமியெல்லாம் காடு தனிந்துவராம்  – அகிலத் திரட்டு

நாடெங்கும் உள்ள காடுகள் அழியத் துவங்கும்

அனைத்து இடங்களிலும் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. அவைகளை மீண்டும் தோற்றுவிக்கப்படுவது அவசியம் ஆகி விட்டது. மரவேலைகள், அடுப்பெறிக்க, விலங்குகளுக்கு தீவனம் என பல்வேறு காரியங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்ஒரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய நாட்டுப் பரப்புத் தொகையில் இருபத்தி மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே காட்டு வளம் உள்ளது. ஆனால் வன வளம் ஒரு நாட்டிற்கு மிகவும் அவசியமானது.
அதைதான் அய்யா வைகுண்டர் அருள் நூலில் நாடுதிறவை உலா என்ற பாகத்தில் கூறி உள்ளார்கள். ஆனால் சிவகண்ட அதிகாரப்பாத்திரத்தில் நாடெல்லாம் காடாக்கும் என கூறி உள்ளார். நாட்டில் வன வளம் பெருகும் எனக் குறிப்பிட்டு உள்ளது ஆறுதலான விஷயம்.

பால் மற்றும் பசு மாடுகள்

ஆடுமாடு அறுகுதாடி காத்த அவினங்கள் தோணுதடி
ஆடுமாடுகள் குறைந்து போனாலும் அவற்றின் பால்வளம் பெருகும்

ஆடு மாடுகள் அதிகப் பால் சுரக்க வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு ஊசி மருந்துகள் போடுகின்றனர். அதனால் பால் வளம் இரு மடங்காகி விட்டது. அய்யா வாழ்ந்திருந்த காலத்தில் அப்படிப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் கிடையாது என்றாலும் இதை அய்யா வைகுண்டர் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறி உள்ளார். அதை; தவிற விஞ்ஞானிகள் அதிகப் பால் தரும் மாடுகள் பிறக்க வகை செய்யும் கரு முட்டைகள் தயாரிக்கின்றனர். அருள்நூலில் அய்யா கூறியபடியே அது  நடக்கின்றது. 

ஸ்ரீலங்கா

ஸ்ரீலங்கா மரியாத்து சென்னில் விளையுதடா தீ மீளுக நலச்சு
என்னுடைய தம்பிமார்களே இலங்காபுரி ஆளுவாய் – அகிலத் திரட்டு

ஸ்ரீலங்காவில் இரத்தம் சிந்தி தீயும் மூண்டு என் தம்பிமாரே நீயே அதை ஆள்வாய்
ஸ்ரீலங்காவில் நடக்கும் உள்நாட்டுச் சண்டைப் பற்றி அருள் நூலில் அய்யா முன்பே கூறி உள்ளார். ஸ்ரீலங்காவை தங்களுடைய பகுதிகளுடன் இணைத்துக் கொள்வதில் பல தமிழக மன்னர்கள் முயன்றனர். 1815 ஆம் ஆண்டில் கண்டியை ஆண்டு வந்த கடைசி தமிழ் மன்னனான விக்ரம் இராஜசிங்கம் ஆங்கில அரசை எதிர்த்து சண்டையிட்ட பொழுது அவரை தமிழ் நாட்டில் உள்ள வேலூர் சிறையில் அடைத்தனர். அப்பொழுது அய்யா வைகுண்டர் அவதரிக்கவில்லை. அது முதற்கொண்டே அங்கு தமிழர்களுடைய நலிவுக் காலம் துவங்கியது. அதிபர் ஜெயவர்தனே பதவி ஏற்கும் முன்பு தமிழர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இரண்டாம் குடிமகனைப் போல அவர்கள் நடத்தப்பட்டனர். கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு இனப் போர் நடந்து கொண்டு இருக்கின்றது. அய்யா வைகுண்டர் சென்னில் விளையுதடா எனக் கூறியதின் மூலம் அங்கு சிந்த இருக்கும் இரத்தக்களரியைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை பதினைந்தாயிரம் உயிர்கள் பலியாகி உள்ளன. அய்யா வைகுண்டரின் குறிப்பின்படி தமிழ் ஈழம் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முழுவதுமே தமிழர் ஆட்சியில் மலரப் போகின்றது என நம்பலாம்.

நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami