Social Reforms

தீண்டாமை தற்பொழுது அறவே ஒழிந்த விட்டது எனலாம். அது ஜாதிகள் இடையே நிலவி வந்த கொடிய நோய். தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குப்; பல கொடுமைகள் நி;கழ்ந்து வந்தன. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டனர். தாழ்ந்த ஜாதியினர் தெருக்களில் செல்லும் பொழுது தாம் வருவதைக் குறிக்க குரல் ஒலித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்றும் உயர் ஜாதியனருக்கு அவர்களைப் பார்த்தால் தீட்டு வந்து விடும் எனவும் நம்பப்பட்ட கொடுமையான காலம் உண்டு. அவற்றை ஒழிக்கவே வைகுண்டர் முயன்றார். அதற்கு முன்னொடியாக சமபந்திபோஜனம் என்பதைத் துவக்கினார். அதில் ஜாதி பேதம் இன்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சமுதாய சீர்திருத்தங்கள்

உற்சவ நாட்களில் பல்வேறு இடங்களுக்கும் அய்யா வழியினர் சென்று யாசகம் பெற்று வந்தனர். உற்சவத்தின் எட்டாவது நாளன்று அந்த பணத்தைக் கொண்டு ‘உண்பான்’ என்ற உணவு தயாரிக்கப்பட்டு கரண்டி இன்றி அவர்களுடைய வெறும் கரங்களினாலேயே அனைவருக்கும் பரிமாறு கூறினார். அதற்குக் காரணம் மனிதர்களில் பேதம் இல்லை என்பதை நிருபிக்கத்தான். இன்றும் பலரும் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டு உணவு அருந்துகின்றனர்.
ஒரு காலத்தில் கீழ் ஜாதியினர் சமைத்த உணவுகளை உயர் ஜாதியினர் அருந்த மறுத்தனர். ஆகவே அய்யா தன்னுடைய சீடர்களை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி கீழ் ஜாதியினருடன் உணவு அருந்திவிட்டு வருமாறு கட்டளை இடுவது உண்டு. அப்படித்தான் ஒரு முறை தலக்குளம் என்ற இடத்தில் உள்ள கருப்பாரி என்ற கிராமத்திற்கு தன்னுடைய இரண்டு சீடர்களை அய்யா அனுப்பினார். அங்கு சென்று வண்ணார் வகுப்பைச் சேர்ந்த பிச்சம்மாள் என்ற பெண்மணியின் வீட்டில் உணவு அருந்துமாறு கூறி இருந்தார். அந்த சீடர்களும் வேறு எங்கோ சென்று விட்டு அந்த கிராமத்திற்கு செல்லாமல் திரும்பி விட்டனர். அய்யா கூறிய ஆணையை ஏற்று பிச்சம்மாள் அந்த விருந்தாளிகளுக்கு உணவு தயாரித்து வைத்தப் பின் வெகு நேரம் காத்திருந்தாள். அப்படியும் அவர்கள் வரவில்லை என்பதினால் அவர்களக்காக தயாரித்த உணவை ஒரு குழி தோண்டி அதில் கொட்டி விட்டு குழியை மூடி விட்டாள். அதை அறிந்து கொண்ட அய்யா திரும்பி வந்த சீடர்க்களை விடவில்லை. அவர்களை மீண்டும் அவள் வீட்டிற்கு அனுப்பி இரண்டு நாட்கள் முன்பு அவள் சமைத்து வைத்திருந்த உணவையே அருந்துமாறு ஆணையிட்டார். அவர்களும் வேறு வழி இன்றி அந்த கிராமத்திற்கு சென்றதும் அந்த உணவை எந்த குழியில் புதைத்து வைத்திருந்தாளோ அதை தோண்டிய பொழுது , என்ன ஆச்சரியம் அந்த உணவு புத்தம் புதியதாக சமைத்தது போல மண் வாசைன இன்றி அங்கேயேஇருந்தது. அந்த சீடர்களும் அதை அருந்தி விட்டு வந்து அய்யாவுடைய மகிமைகளை மற்றவரிடம் கூறினார்.

அடுத்து அய்யா சமுதாயக் கிணறுகளைத் தோண்டினார். அந்த காலத்தில் ஜாதியினர் வாரியாக அவரவர்கள் பயன் படுத்த பல கிணறுகள் இருந்தன. முத்திரிக் கிணறு என்ற இடத்தில் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு சமுதாயக் கிணறு தோண்டப்பட்டு உபயோகத்திற்கு விடப்பட்டது.

முன் காலத்தில் கீழ் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழையத் தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் ‘தொட்டு நாமம் சாற்றுதல்’ என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்களில் தரப்படும் வீபுதிப் பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கிப் போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் பழக்கம் துவக்கப்பட்டது. அங்கிருந்த குருமார்களை இரு விரல்களைக் கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார்.

சமுதாயத்தில் கௌரவம்

அந்த காலத்தில் கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் தலைப்பாகை அணிய தடை செய்யப்பட்டு இருந்தனர். அது போலவே உயர் ஜாதியினர் அணிந்த ஆடைகள் போல ஆடைகள் அணிவதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் இடுப்புக்குக் கீழாகவும் முழங்காலுக்கு மேலாகவும் இருக்குமாறு மட்டுமே வேட்டி அணிய முடியும். முதலில் அந்;த பழக்கத்தை ஒழிக்க அய்யா முடிவு செய்தார்.

தற்பொழுது உருமல்காட்டு என்று அழைக்கப்படும் இடம் முன்பு உரிமைக்காட்டு என கூறப்பட்டது. பதினாறு வயதான கீழ் ஜாதியை சேர்ந்த சிறுவர்களுக்கு அந்த ஊரில் தலைப்பாகை அணிவித்து ஒரு சடங்கு செய்யப்பட்டு வந்தது. ஆனால் உயர் ஜாதியினர் செய்த கொடுமையால் அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் இடுப்புக்கு மேல் துணிகள் உடுத்தக் கூடாது. தோளில் துண்டு போட்டுக் கொள்ளக் கூடாது.துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். தலையில் பாரத்தை சுமந்து செல்லும் பொழுது கூட தலைப்பாகை அணியக் கூடாது. பனை ஓலைகளால் ஆன குடுவைகளை வைத்துக் கொள்ளவே அனுமதிக்கப்பட்டனர். அதை உடைக்கும் முறையில் அய்யா தன்னுடைய பக்தர்களை தலைப்பாகை கண்டிப்பாக அணிய வேண்டும் எனவும், கால் விரல் தொடும் அளவுக்கு வேட்டி உடுத்துமாறும் கூறி தாழ்த்தப்பட்டோர் இனத்திற்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
அய்யா கூறினார்
கந்தல் துணிக்குள்ளே தந்தேன்
நன்கனகமணி முத்திரையும்
துவையல் பந்தி
இப்பொழுதெல்லாம் எந்த திட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் எனில் அதில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. அது போல அன்றைக்கே துவையல் பந்தி என்ற பெயரில் அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து தூய்மைப் படுத்துவதை துவையல் பந்தி என்ற பெயரில் அய்யா செய்தார்.

முன் காலத்தில் கீழ் ஜாதியினர் சுத்தமாக இருந்தது இல்லை. கள் அருந்துவதும் புகையிலைப் போடுவதும் தொடர் பழக்கமாக அவர்களிடம் இருந்தது. மீன் இல்லாத உணவு தயாரிக்கப்பட மாட்டாது. ஆகவே அவர்களுடைய எண்ணத்தை மாற்ற அய்யா நினைத்தார். முதலில் அவர்கள் சைவ சாப்பாடு அருந்துபவர்களாக மாறினாலேயே சமுதாயாத்தில் அவர்களக்கு மதிப்பு ஏற்படும் என நினைத்தார். துவையல் பந்தி என்ற பெயரில் கடலில் தினமும் மூன்று வேளைகள் குளிக்க வேண்டும், அவர்களுடைய துணிகளை உடனடியாகத் துவைத்து உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும, பச்சரிசி மற்றும் பருப்பை உப்புத் தண்ணீரில் சமைத்து அருந்த வேண்டும, ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு வைத்த பயிற்சியைத் துவக்கினார். இப்படியாக வாகைப் பதி என்ற இடத்தில் ஆறு மாதம் பயிற்சி தந்தார். அதன் பின் முத்தப்பதிக்கு சென்று அங்கும் அதை தொடர்ந்தனர். அந்த இடத்தில் அவர்கள் காய்கறிகள் மட்டுமே அருந்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் துவையல்காரர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அய்யா வழி இயக்கத்தைப் பரப்பினர்.

அன்பு இயக்கம்

இந்த இயக்கத்திற்கு ஒரு கொடியை உருவாக்கினார். அதன் பெயர் அன்புக்கொடி. இருபுறமும் ஜோதி வடிவில் நாமம் போடப்பட்ட காவி நிறக் கொடி அது. அன்பே அனைவரையும் இணைக்கும் பாலம் என நம்பிய அய்யா நிழல் தாங்கல்களிலும், இல்லங்களிலும் அந்த கொடியை பறக்க விடச் சொன்னார். மாசி மாத வைபவத்தில் அந்தக் கொடிகளை ஏந்திக் கொண்டுதான் சாமித்தோப்பில் ஊர்வலம் நடைபெறுகின்றது. அந்த கொடி அய்யா வழியின் சின்னமாகும். அதை அகிலத்திரட்டில் அய்யா வெளிப்படுத்தி உள்ளார்.

நிழல் தாங்கல்கள்

செட்டிக்குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், பாலுர், சுண்டவில்லை பொன்ற இடங்களிலும் கடம்பான்குளம், வடலிவில்லை, பாம்பன் குளம் போன்ற இடங்களிலும் அய்யா வழி இயக்கத்தை விரிவுப் படுத்த தன்னுடைய பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி வழிபாடு நடத்த நிழல் தாங்கல்களை அய்யா அமைத்தார். அந்த இடங்களுக்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பலரும் வந்தனர்.

ஒவ்ஒரு நிழல் தாங்கலும் இரண்டு அறைகள் கொண்டவை. பணிவிடைக்காரர்கள் என அழைக்கப்பட்டவர்கன் அங்கு தினமும் வந்து வணங்குபவர்கள். அந்த நிழல் தாங்கல்கள் கல்விக் கூடங்களாகவும், அய்யா வழி இயக்கத்தை புரிந்து கொள்ள பயிற்சி பெறும் இடமாகவும் விளங்கின.

ஓவ்ஒரு நிழல் தாங்கல்களிலும் வாரம் ஒரு முறை உச்சிப் படிப்பும் உகப் படிப்பும் நடந்தன. வருடம் இரு முறை அந்த இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறும். மாதம் ஒரு முறை முதல் ஞாயிற்றுக் கிழமையில் பால் வைப்பு என்ற பெயரில் உடைத்தப் பச்சரிசியில் உணவு செய்து நாராயணருக்கு நைவித்தியம் படைப்பது பல நிழல் தாங்கல்களிலும் நடைபெறுகின்றன.

நிழல் தாங்கல்களை அய்யாப்பட்டி, நாராயணசாமிபதி மற்றும் நாராயணசாமி கோவில் எனவும் பெயரிட்டு அழைத்தனர். அந்த இடத்தில் உருவ வழிபாடு தடை செய்யப்பட்டு உள்ளது. கூடி உள்ள அனைவரும் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என கோஷம் போடுவர். ஒரு நாற்கலியில் காவி நிறத் துணி வைக்கப்பட்டு அதன் மீது ருத்திராட்ச மாலை வைக்கப்பட்டு இருக்கும்;. அதன் பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடி மாட்டப்பட்டு இருக்கும். தினமும் பணிவிடைக்காரர்கள் அதன் முன்பாக குத்து விளக்கு ஏற்றி வைப்பர்.

மறுப்பு இயக்கம்

அய்யா வைகுண்டர் தம்முடைய பக்தர்களிடம் முழு சம்பாத்தியத்தையும் வரியாகச் செலுத்த வேண்டாம் எனக் கூறியதால் அதை அவர்கள்வரி செலுத்த மறுத்தனர்;. அதற்கு முன் உயர் ஜாதியினர் கீழ் ஜாதி மக்களிடம் பரி என்ற பெயரில் வரி வசூலித்து வந்தனர். அதனால் அய்யா வைகுண்டர் அரசர்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது என முறையிட்டார். அய்யாவுடைய ஆணையை ஏற்ற கீழ் ஜாதியினர், முக்கியமாக நாடார் இன மக்கள் வரி செலுத்தவும் சம்பளம் இன்றி வேலை செய்யவும் மறுப்புத் தெரிவித்தனர்.

அய்யாவின் காலத்திற்கு முன்பும், அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் பிராமணர் ஆதிக்கம் அதிகம் இருந்தது. சமஸ்கிருத மொழியில் மட்டுமே ஆலயங்களில் பூஜைகள் செய்தனர். திருமண மந்திரங்களும் சமிஸ்கிருத மொழிகளில் மட்டுமே இருந்தன. சமிஸ்கிருத மொழி தேவர்களில் மொழி எனவும் அதை மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது எனவும் தடை செய்தனர். ஆகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அய்யா அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழ் மொழியில் மட்டுமே நடத்தினார்.

அய்யா வழி திருமணம் என்ற புதுப் பாணியில் தமிழ் மொழியில் திருமண மந்திரங்கள் ஓதப்பட்டன. திருமணத்தை கந்தன் திருமணம் என்றும் அதை சிவபெருமான் விஷ்ணுவின் முன்னிலையில் நடத்தி வைப்பதாகவும் அய்யா கூறினார். மணப்பெண்ணும், மணமகனும் தெற்குப் பக்கத்தை நோக்கி அமர்ந்திருக்க அவர்களடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார்.

சமூக சீர்திருத்தங்கள்

திருமணத்தில் அகிலத்திரட்டில் எழுதி உள்ள கல்யாணப் பாட்டு படிக்கப்படும். ‘மவுனி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ ‘ என்ற ஐம்பத்தி ஆறு வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும் அதைப் படிக்க சுமார் ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்படும். குரு அதைப் படிக்கப் படிக்கப்படிக்க கூடி உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவர். கீழ் கண்ட வரிகளை குரு ஐந்து முறை படிப்பார்.
அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுந்து
அதன் பின் குரு தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்தப் பின்
சிவ சிவா என்று சொல்லி திருச் சரடு சேர்த்தனரே
என குரு படிக்க, மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவான். கல்யாண வாழ்த்தில் உள்ள மற்ற வரிகள் மணமக்களை வாழ்த்தும் வரிகள். கல்யாணம் முடிந்ததும் மணவறையை சுற்றி ஐந்து முயை மணமக்கள் நடப்பார்கள். திருமணம் நிறைவேறிவிடும். இப்படியாக 150 வருடங்களாக அய்யா வழித் திருமணங்கள் நடந்து வருகின்றன. சாமித்தோப்பிலும் திருமணங்கள் நடைபெறுகின்றன.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami