Temple

‘பொன் மேனிக் கோட்டை மணிக் கோவில் வைத்து
தென் மேனி சான்றோர் திருநாள் நடத்தி வந்தார் – அகிலத்திரட்டு

இங்குள்ள ஆலயம் மற்ற ஆலயங்களை விட மாறுபட்டது. தூபதீப ஆராதனைகள், மூல விக்ரகம், மற்றும் பண்டிதர்கள்; கிடையாது. அது மட்டும் அல்ல உண்டியல் கூட வைக்கப்படவில்லை. பக்தர்கள் தரும் காணிக்கைகள் அங்கு வரும் மற்ற பக்தர்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகின்றது. இடுப்பில் துணியை கட்டிக் கொண்டு பிரார்தனை செய்வது போன்ற இந்து ஆலயத்தின் பழக்க முறைக்கு இந்த ஆலயத்தில் உள்ள முக்கியமான தெய்வம் அய்யா நாராயணர் ஆவார். கலியுகத்தின் முடிவில் திருமூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் மூவரும் ஒன்றாக இணைந்து மனித குலத்தைக் காத்திட இங்கு வந்தனர். மற்ற ஆலயங்களில காணப்படும் பூஜைகள் செய்யும் குருக்கள்; போன்ற எவரும் இங்கு இல்லை என்றாலும், இந்த ஆலயத்தில் உள்ள குரு ஒருவர் அய்யா பற்றிய பாடலைப் பாடும் பொழுது அங்கு கூடி உள்ள பக்தர்கள் அவர் பாடியதை மீண்டும் திரும்பப் பாடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் உள்ள மூல தெய்வம் ஒரு ஈட்டி. அதனுடன் நாமம் போட்டது போல ஒரு துணி கட்டப்பட்டுள்ளது. அதன் பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தத்துவம் என்ன எனில் ‘முதலில் உன் உள்ளத்திற்குள்ளேயே மறைந்து கிடக்கும் கடவுளை நீ; பார்த்துக் கொள்’ என்பதே.

விடியற் காலையில் ‘ அய்யா, சிவ சிவா, அரகரா, அரகரா ‘ என்ற கோஷத்துடன் துவஙகும் வழிபாடு தினமும் ஐந்து முறை நடைபெறுகின்றது. இங்கு வரும் பக்தர்கள் ஐந்து முறை பிரதர்ஷணம் செய்த பின் அங்குள்ள தெய்வத்தை நமஸ்கரித்து வணங்க வேண்டும். கடவுளிடம் செல்வதற்கு முன்பு ஐம்புலன்களையும் அடக்கியவன் என்ற அர்த்தத்தில் ஐந்து முறை அப்படி செய்கின்றனர். ஊதுபத்தி கொளுத்துவது மற்றும் கற்பூர ஆரத்தி எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம், மலர்கள் மற்றும் தேங்காய் போன்றவை பிரசாதமாகப் படைக்கப்படுகின்றன. அதன் பின் அங்குள்ள குருக்கள் பக்தர்கள் நெற்றியில் ஈரமிக்க மண்ணினால் நாமம் போடுகின்றார். விஷேச பிரசாதமும் பக்தர்களுக்குத் தரப்படுகின்றது.

மற்ற ஆலயங்களைப் போலவே தலம், தீர்த்தம் மற்றும் மூர்த்தி என்ற மூன்று பெருமைகளையும் இந்த ஆலயம் பெறுகின்றது. வைகுண்ட ஸ்வாமியின் மனித உடலே இந்த ஆலயத்தின் மூல முர்த்தி. அவருடைய சமாதி மீதுதான் இந்த ஆலயம் எழப்பப்பட்டு உள்ளது. அகிலத்திரட்டு எனும் புனிதப் புத்தகம், சிவனிடம் இருந்து தவம் செய்து அர்ஜூனன் பெற்ற பசுபதாஸ்த்திரத்தை பற்றிக் கூறுகின்றது. மகாபாரதம் எழுதிய வியாச முனிவர் அவதரித்த இடம் இது. ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது முத்துக்கிணறு ஒரு புனித தீர்த்தம். முதலில் பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடிய பிறகே ஆலயத்திற்குள் நுழைகின்றனர். ஆலயத்தில் நுழைந்ததும் அந்தக் கிணற்றில் நீராடிய பக்தர்கள் ஈரத் துணியுடனும், தலைப் பாகையுடனும் அங்கு வருவதைக் காண்கின்றோம். வடக்குவாசல் வழியாகவே ஆலயத்தில் பக்தர்கள் நுழைகின்றனர். வடக்குவாசல் என்ற அந்த இடத்தில்தான் அய்யா வைகுண்டர் ஆறு வருட காலம் தவத்தில் இருந்தார். அந்த ஆலயத்தை சுற்றி வரும் பக்தர்கள் ‘அய்யா சிவ, சவா, அரகரா, அரகரா’ என்ற கோஷம் எழுப்புகின்றனர். வடக்குவாசலில் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு அந்த இடத்து மண்ணே பிரசாதமாகத் தரப்
தரப்படுகின்றது. அந்த இடத்தில் தர்மம் செய்தால் ஒருவருக்கு இருக்கும் பல பாபங்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆலயத்தில் ஆலய மணி வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் ஆலயத்தை சுற்றி ஐந்து முறை பிரதர்ஷணமாக வந்தப் பின் கிழக்கு நடை என்ற ஆலய வாசல் வழியே உள்ளே நுழைகின்றனர். ஆலயத்தினுள் ஐம்பத்தி ஐந்து உயர கொடி மரம் கட்டப்பட்டுள்ளது. வருடத்தில் மூன்று முறை சமஸ்தானத்தின் சார்பில் அந்த புனிதக் கொடி ஏற்றப்படுகின்றது.

கருவறையை சுற்றி உள்ள பிராகாரம்; மற்றும் கொடிக் கம்பத்தை சுற்றி; பக்தர்கள் ஐந்து முறை வலம் வருகின்றனர். உள் பிராகாரத்தில் முத்துக் குட்டியின் ஒரே மகனான புதுக்குட்டிக்கு சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. ஆலய குருகுலத்தின் முதல் குரு அவரே. வடக்குப் பக்கத்தில் புதுக்குட்டியின் அன்னையும், முத்துக் குட்டியின் மனைவியுமான திருமால் அம்மைக்கும் சன்னதி உள்ளது. மலையாளத்தில் உண்பான்புரை எனக் கூறப்படும்; மாடப்பள்ளி என்ற இடமும் உள்ளது. அங்குதான் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. உள்ளே நுழைந்து இன்னமும் சென்றால் இங்;கு வரும் பக்தர்கள் உகப்படிப்பு ஓதுவதற்கு வசதியான ஒரு பெரிய மண்டபம் அமைந்து உள்ளதைக் காணலாம். தெற்கு பக்கத்தில் கருட மேடை உள்ளது. இந்த இடத்தில்தான் அனைத்து தெய்வங்களும் வைகுண்டரிடம் தங்களுடைய சக்திகளைத் தந்தனராம். அங்கு சில பழைய காலத்து ஆயுதங்களும் குத்தி விளக்கும் உள்ளதைக் காணலாம்.

பள்ளியறை பிராகாரத்தின் அருகில் தென் பகுதியில் முனிமார் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. வைகுண்டருடன் தங்கி இருக்க கடவுள் விஷ்ணுவானவர் அனுப்பிய முனிவர்கள் அங்கு வந்தனர் என புனிதப் புத்தகமான அகிலத்திரட்டு தெரிவிக்கின்றது. வடக்கு பக்கத்து பிராகாரத்தில் உள்ள குருமார்கள் அங்கு வரும் பக்தர்கள் நெற்றியில் மண்ணினால் நாமம் போடுகின்றனர். பள்ளியறை பிராகாரத்தின் வழியாக கருவறை உள்ள சன்னிதானத்தில் நுழைபவர்கள் ஐந்து சுற்றுக்கள் சுற்றியபடி’ அய்யா, சிவ சிவா, அரகரா, அரகரா ‘ என கோஷம் எழுப்புகின்றனர். கருவறையில் ஆரஞ்சு நிறத்தில் முக்கோணமாக சுற்றப்பட்ட துணி வைக்கப்பட்டு அதன் பின்புறம் ஒரு நிலைக் கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் காணிக்கையை பொருளாகவோ, பணமாகவோ தருகின்றனர். பணத்தை குருமார்களிடம் தருகின்றனர். அதை விளக்கு எண்ணைக் காசு அதாவது விளக்கேற்ற தேவையான எண்ணையை வாங்க பயன்படுத்தப் படும் தொகை என்ற பெயரில் பெற்றுக் கொள்கின்றனர். பள்ளியறை பிராகாரம் மற்றும் கருவறையைத் தவிற மற்ற இடங்களில் ஓடுகளினால் அமைக்கப்பட்ட கூரையே உள்ளது. இந்த ஆலயம் மற்ற ஆலயங்களைவிட மிகவும் வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது.

இன்னுமொரு முக்கியமான விஷயம் என்ன எனில் இந்த ஆலயம் முழுக்க முழுக்க ஏழை மக்களால் கட்டப்பட்டது. வேறு எந்த ஆளுனரும் அதற்கு உதவவில்லை. உண்மையில் திருவான்கூர் மன்னப் பரம்பரையினர் இந்த ஆலயத்தைக் கட்ட பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆலய வளாகத்திற்குள்; இராஜ கோபுரம் எழுப்பவும் ஒரு பெரிய மண்டபம் அமைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami