Gurukulam

அய்யா வழி ஆலயம் குருகுலத்தில் உள்ள குருமார்களுடைய மேற்பார்வையில் உள்ளது. அதை அவர்கள்தான் நிர்வாகிக்கின்றனர். அந்த குருமார்கள் குருக்குட்டியின் வழித் தோன்றல்கள் (பரம்பரையினர்);. தினமும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நன்கு நடைபெற ஐந்து சிஷ்யர்கள் அய்யா வைகுண்டருக்கு உதவி வந்தனர் எனத தெரிகின்றது. அதில் புதுக்குட்டி குருவானவர் கடவுளுக்கு நித்தியப் படையலுக்கு தேவையான சமையலை செய்து வந்தார். அவர்கள் நன்கு பயிற்சி பெற்றதும் பல்Nவுறு இடங்களுக்கும் சென்று அய்யாவின் கொள்கைகளைப் பரப்பத் துவங்கினர்.

அய்யா வைகுண்டர் அவர்கள் தன்னுடைய சிஷ்யர்கள் ஒவ் ஒருவருக்கும் ஐந்து சக்கரப் பணம்; கொடுத்து வந்தார். சக்கரம் என்பது அன்றைய திருவான்கூர் அரசு நாணயம். மீதி இருந்த சக்கரத்தை புதுக்குட்டியிடம் தந்து விடுவார். என்றைக்காவது கொடுக்கும் பணம் குறைவாகி விட்டால் முதல் நாள் தான் கொடுத்தப் பணத்தை எடுத்து வரச் சொல்லி அதில் இருந்துத் தந்து விடுவார். இப்படியாக அவர் அந்த ஆலயத்தை நிர்வாகித்து வந்தார்.அவருடைய வழித் தோன்றல்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என தற்பொழுது ஆலயத்தை நிர்வாகித்து வருகின்றனர். பட்டத்து அய்யா எனப்படும் திரு அனந்தக்குட்டி நாடார் அவர்களில் முதன்மை குரு ஆவார். மற்ற குருமார்கள் பய்யன் செல்லராஜ், பால பிரஜாபதி, பால ஜனாதிபதி, பாலகான்தீபதி, பய்யன்சாமி. தங்க பாண்டியன், சேகர் போன்ற பலர். ஒருவர்தான் நிர்வாகி என்றாலும் கூட அனைவரும் கலந்து ஆலோசனை செய்தே ஆலய நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றனர்.

– நன்றி சாந்திப்பிரியா

Close Bitnami banner
Bitnami